search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி கார்"

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட் நீதிபதியின் காரை மறித்து தகராறில் ஈடுப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியும், போலீஸ் இன்ஸ்பெக்டருமான அவரது மனைவியும் அவர்களின் குழந்தையை கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விட்டு விட்டு காரில் பந்தலூருக்கு திரும்பி சென்றனர்.

    காரை நீதிமன்ற ஊழியர் வினோத் கண்ணா ஓட்டி சென்றார். கட்டபெட்டு பஜாரை கார் கடந்த போது 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் காரை பின் தொடர்ந்து வந்து ஹாரன் அடித்து முந்தி செல்ல முயன்றுள்ளனர்.

    பின்னர் சாலை வளைவில் முந்தி சென்றவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காரை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கார் பாக்கிய நகர் சென்ற போது ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட 3 பேர் தனது நண்பர்கள் சிலருடன் நீதிபதி காரை நிறுத்தி மீண்டும் தகராறு செய்து உள்ளனர். அப்போது கார் டிரைவர் வினோத் கண்ணா, காரில் நீதிபதியும் அவரது மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டரும் உள்ளனர். தகராறு செய்யாமல் வழி விடுங்கள் என கேட்டுள்ளார்.

    காரில் இருந்து இறங்கி சமரசம் செய்த நீதிபதி மற்றும் அவரது மனைவியிடமும் தகராறு செய்துள்ளனர்.

    இது குறித்து கார் டிரைவர் வினோத் கண்ணா கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், அலெக்சாண்டர், மார்ட்டின் லூதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் கட்டபெட்டு பாக்கிய நகரை சேர்ந்த சரவணன் (36),ராமகிருஷ்ணன் (21),லட்சுமணன் (23), பிரகாஷ் (45),துரைராஜ் (58) கோபிநாத் (27) ஆகியோர் தகராறு செய்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×